பக்கங்கள்

செவ்வாய், 28 ஜூன், 2011







தத்துவங்க்ளும்
கொள்கைகளும்
கோட்பாடுகளும்
புத்தகங்களாய்
பழைய காகிதக்கடையில்
"கழுத அறியுமா
கற்ப்பூர வாசனை?"

************************************இளஞாயிறு/9443761307
இலவசங்களை
மனிதனைத் தவிர
எந்த மிருகமும்
எதிர்பார்ப்பதில்லை




வேலைவாய்ப்பு
உறுதியில்லை
உயர்கல்வி முடித்ததும்
வங்கிக் கடனாளியாய்
இளம் மாணவன்
அய்ந்தாண்டு ஆட்சியில்
அனைத்து வகையிலும்
நாடு முன்னேற்றம்
ஆனாலும் தொடர்கிறது
ஏழைகளுக்கான
இலவசங்கள்
**********************************புதியபெரியவன்/9489361307


ஒரு தேர்தலில்
கெட்டவனுக்குப் போட்ட
வாக்கை
அடுத்த தேர்தலில்
மற்றொரு
கெட்டவனுக்கு போடும்
இயந்திரம்
தமிழன்
******************************வி.உதயகுமாரன்/9962861594




மங்கி வருகிறது
மக்களாட்சி
மக்களுக்கான
ஊழியர்களை
மன்னர்களாய்
நினைக்கும்
மக்களால்
*******************************மறைந்த கா.முருகன்/9750606161




தாலி விற்று
டாஸ்மாக்
செல்வோர்க்கெல்லாம்
தக்க சமயத்தில்
உதவுகிறது
"இலவசங்கள்"
********************************தனலட்சுமிபாஸ்கரன்/9765895540




கோவணம் இல்லா மக்களை
கல்லால் அடிப்பார்கள்
கொள்கை இல்லாதவர்களை
கோட்டையில் ஏற்றுவார்கள்
தமிழ்மக்கள்

இலவசங்கள் மூலம்
ஏழ்மையை
ஒழிக்கலாம் - என்பது
ஓட்டைச்சட்டியில்
நீரை சேமிப்பது
போன்றது
**********************படித்தது****அருண்/9865076550

திங்கள், 27 ஜூன், 2011

வெங்காயம் / 28-06-2011



இலவசங்களைத் தேடுது
இயலாதபோது மனம்
இரவு நேரக் கனவுகள்

புதுப்பிக்கப்பட்டது
அடிமை சாசனம்
தேர்தல் முடிவுகள்
*****************************கோவை கோகுலன்/9842238022
அரசியலில்
நிரந்தர நண்பனும்
கிடையாது
நிரந்தர எதிரியும்
கிடையாதாம்
காதுகுத்தல்

பெயர் சொல்ல வேண்டாம்
தரம் எளிதில் விள்ங்கும்
டாஸ்மாக்

நிசப்தமாய் நடந்த
யுத்தத்தின்
சத்தமான் முடிவு
குழந்தை பிறப்பு

************************முத்துபாரதி/9655257195


கடிவாளம் போட்ட குதிரையாய்
ஆங்கிலப் பள்ளி மாணவர்கள்
பரந்துபட்ட பார்வையில்
அரசு பள்ளி மாணவர்கள்
கவுரவம் பார்க்கும்
பெற்றோர்கள்
காசு பார்க்கும்
கல்வி வியாபாரிகள்
*********************************கி.சு / 9489161307

ஞாயிறு, 26 ஜூன், 2011

வெங்காயம் 27-06-2011


கலைமகளாய்
மாறினாள்
திருமகள்
இருவரும்
மூலையில்
சமச்சீர்க் கல்வி

**************************மீனாதேவி/9787747824

நன்றி சொல்ல எம்.எல்,ஏ
வரும் முன்
வந்துவிட்டது
கல்வியிலும்
கட்டணத்திலும்
குழப்பம் வேதனை
இன்னும் அய்ந்து
வருடங்கள்
என்னென்ன
சோதனைகளோ
வேதனைகளோ
******************************புதியபெரியவன்/9489361307
கலந்து வரும்
ஆலைக் கழிவுகள்
மிதந்து வரும்
மனிதக் கழிவுகள்
புண்ணிய நதி
கங்கையில்
புனித நீராடல்
******************************புதியபெரியவன்/9489361307

சனி, 25 ஜூன், 2011

வெங்காயம் 25-06-2011



சமச்சீர்க் கல்வி கேள்விக்குறி
கல்விக் கட்டணம் அத்துமீறி


குழப்பம் வேண்டாம்



ஜெயலலிதா தரும் இலவச
ஆடு மாடுகளை



குழந்தைகளுக்கு கொடுங்கள்
மேய்க்கட்டும்



வருமானம் போதவில்லையா
கோவிலுக்குப் போங்கள்



பிச்சையெடுப்போரின்
அவலக்குரலைத் தாண்டி....



அங்கே ஜெயலலிதாவின்
உறவுப் பார்ப்பான்
மணியாட்டிக் கொண்டிருப்பான்



காணிக்கையை கொடுத்துவிட்டு
கல்லிடம் முறையிட்டுவிட்டு
வாருங்கள்



மீண்டும் இராஜிஜியின்
குலக்கல்வி முறையை
அமுலாக்க



பார்ப்பண- சோ க்களின்
இன்னொருமுகம்
ஜெயலலிதா


**************************9489361307

வெள்ளி, 24 ஜூன், 2011

வெங்காயம் 24-06-2011









பள்ளிக் கட்டணம் அதிகரிப்பு
போராடும் பெற்றோர்கள்
வேடிக்கை பார்க்கும் அரசு



**************************கன்னிக்கோவில்ராஜா/9841236965


கர்னாடக சங்கீதத்தில்
உறங்கிக் கிடந்தவர்கள்
விழித்துக் கொண்டார்கள்
நாட்டுப்புற இசை மழையில்



*******************************புதியபெரியவன்/9489361307

சிங்கார அலைகலுக்கு நடுவே
சிந்தை நழுவாது தவம்
பாறைகள்



***********************************மரியதெரசா/9282111071




இயங்கிக்கொண்டிருக்கும்
சுருசுருப்பை
கற்றுத்தந்தது
கொசுக்கடி
***********************************முத்துபாரதி/9655257195


ஒவ்வொரு பிறந்த நாளும்
என் இறப்பின் அருகாமையைச்சொல்ல
வாழ்த்தும் நட்புகளும் உறவுகளும்
என்ன சாதித்துவிட்டேன்?
கேள்வியுடன் நான்



***********************************இளஞாயிறு/9443761307



பாரபட்சம் இன்றி
எல்லாக் கட்சிகளிலும்
லஞ்சம் ஊழல்




தீக்குச்சி இல்லாமலே
பற்றவைக்கப்படும்
ஏழைகளின் வயிறுகள்



**************************முத்து ஆனந்த்/9629152468

வெங்காயம் 23-06-2011











உறுப்பினர் ஆக முடியுமா
பள்ளிக் குழந்தைகள்
சுமை தூக்குவோர்
சங்கத்தில்
புதுவை ஈழன்/9790777887



ஆட்டுக்கு ஓநாய் காவல்
களவாணிகள்
கையில்
கலைவாணிகள்
சமச்சீர் ஆய்வுக் குழுவில்
கல்விக் கொள்ளையர்கள்

******************************கவிதாகுமார்/9443856163


விரிசல் விடாமல் இருக்கிறது
என் வீட்டு ஆள் உயர கண்ணாடி
என்று ஆச்சரியப்படாதே
அது இரசிப்பது
என் புற அழகை அல்ல
என் அக அழகை மட்டுமே


****************************சேலம் சுமதி/9003563388

வியாழன், 23 ஜூன், 2011

சாக வேண்டும்








தனலாய்த்
தகிக்க வேண்டும்

அனலாய்க்
கொதிக்க வேண்டும்

சமூக மடமைகள்
அதில் கருக வேண்டும்

இல்லையேல் - என்
எழுத்துக்கள் சாக வேண்டும்





9489361307