பக்கங்கள்

வெள்ளி, 29 ஜூலை, 2011





















அல்லக்கை
நொல்லக்கை
ஆயிரம் இருந்தாலும்

அறிவாளி
ஆலோசகன் சொல்
கேளா
அரசும் ஆட்சியும்

நீதி மன்றமல்ல

எங்கும்
பெய்ர் கெட்டு
அழியும்

அறிவீர் மக்களே
*****************************பெரியபுதியவன்/ 9489361307












ஆன்மீகம்
ஆகமம்
வரலாறு
அனைத்தையும் கடந்து

தமிழனின்
நல
வாழ்வுக்கான

மருத்துவ கையேடு

திருமூலரின்
திருமந்திரம்
**********************************நலம் / 9842564366












நேரம் சரி இல்லையென்று
குறை சொல்லி
சிறை தள்ளி
ஜோசியம் பார்த்த
கைகளுக்கு
பரிகாரம் சொன்னது
கிளி
நான் வானம்
பார்க்காதவன்
*****************************நாசர் / 9566541155

திங்கள், 25 ஜூலை, 2011
















பல ஆயிரம்
சமணர்களைக் கொன்று

அதில் ஓடிய
இரத்த வெள்ளத்தில்

திருஞானசம்பந்தர்
கண்டெடுத்த சொல்

அன்பே சிவம்
****************************9489361307/புதியபெரியவன்














மக்கள் பெருக்கம்
காரணமாக

மேட்டுப்பாளையமும்
பவானியும்

தண்ணீர் தர
மறுத்தால்

திருப்பூரின்
நிலை என்ன?

நொய்யலையும்
நல்லாறையும்
நாசப்படுத்துகிறோம்

*****************************9443761307/இளஞாயிறு















நாறும் உலகில்
நறுமணம் வேண்டி

பிரார்த்தனை
நடக்கிறது

வெட்கமில்லா
மனிதர்கள்
***********************குறிஞ்சிமைந்தன்/9566689083

சனி, 23 ஜூலை, 2011







விற்காத பொருள்
விலை மலிவாய்
ஆடித் தள்ளுபடியில்

விலை மதிப்பில்லா
மங்கையரை

சீதனத்தோடு
வாங்க மறுக்கும்
ஆண்கள்

வெட்கச்சந்தையில்

******************************புதுவைசுமதி/9367177551


ஆட்சி மாற்றம்
கொடிகளின்
நிறத்தில் மட்டுமே

மாறாமல் இருப்பது

மக்களின் ஏக்கங்களும்
விலைவாசி உயர்வும்

*****************************புதுவை சுமதி/9367177551


சாமி பல்லக்கு
கட்டையைத் தொட்டு
கும்பிடுவோர்

வணங்காதது ஏன்
அருள்ஜோதியே...

அங்கு சட்டை அணியாது
தூக்கும்
பணியாளர்களை
****************************அருணாசலசிவா/8124177898

செவ்வாய், 19 ஜூலை, 2011





















உள்ளூர்ப்
பொது மக்களே


ஓடிப்போங்கள்
வீதிக்கு



உருவாகிறது


உலகத் த்ரத்தில்
விமான நிலையம்


அழகாய்
அன்னியன்
வந்துபோக


வாழ்க மக்களாட்சி
வாழ்க மன்னர்கள்
*****************ச.மோகனராசு/9150175868

வெட்கம்

விலை ஏற்றத்தில்
மது




தடுமாறாத
குடிமகன்



தடுமாறும்
குடும்பம்











தனிமனித
வெறுப்பால்



தடுமாறும்



கல்வி
மாணவர்கள்
****************************இளையவன் சிவா/7598253218

வெட்கம்



பீற்றிக்கொண்ட
காதல்

காட்டிக் கொண்டது

விவாகரத்தில்
******************************9626834800

சாதி
சோதிடம்
பணம்
பார்த்து

செய்த
திருமணம்

மனம்
ஒப்பாமல்

விவாகரத்தில்
**************************புதியபெரியவன்/9489361307

சனி, 16 ஜூலை, 2011

வெட்கம் 4



மாணவர்களுக்கு
லேப் டாப்

கணினியில் கல்வி

கேள்விக் குறியாக
பாடத்திட்டம்
****************************இள சகி / 9994595144

வெட்கம் 3






















கை மறைத்து


முகம் மூடிச்செல்லும்


கை விலங்கு
பூட்டிய கூட்டம்


வெட்கம் துறந்து


வாயெல்லாம் பல்லாக
கையசைக்கும்


கயவர்களின்
இன்னொரு கூட்டம்
*****************************தனலட்சுமி/9965895540

வியாழன், 14 ஜூலை, 2011

வெட்கம் 2



சூதற்று வீழ்ந்தாய் நீ



சுய மடமையால்



வீணர்கள் கற்றுத்தந்த



வெட்கத்தால்
***********************ஞானசேகரன்/9842579597

புதன், 13 ஜூலை, 2011

வெட்கம் 1




கொடுப்பவர் ஒருபுறமும்
வாங்குபவர் மறுபுறமும்
இருக்க



வெட்கம் என்பது
மடமையடா
என்ற



அச்சமின்றி
வலம் வருகிறது


கையூட்டு

******************சுமதி சேலம்/9003563388

திங்கள், 11 ஜூலை, 2011

வெங்காயம் / 10-07-2011




தெற்கு சூடான்
தந்தது நம்பிக்கை



தமிழ் ஈழ
நம்பிக்கை



உடைக்கப்படும்
துரோகம்



************************************உதயகுமரன்/9962861594

வெங்காயம் / 11-07-2011
















காடு மேடு வீடு


ஆறு ஏரி கடல்



கோவில் குளம்



தோட்டம் தொரவு



ஓடை கண்மாய்



சாலை வீதி



சாக்கடை சந்து பொந்து



எங்கும் நம் துரோகம்



பாலித்தீன் குப்பைகளாய்



***********************************இளஞாயிறு / 9443761307

சனி, 9 ஜூலை, 2011

கோவை கோகுலன் கவிதைகள்



இலவசங்களைத் தேடுது
இயலாதபோது மனம்
இரவு நேரக் கனவுகள்.

பாதை மாறுகிறது
பயணத்துவக்கம்
புகுந்த வீட்டில் பெண்.


எதுவும் நடக்கலாம்
இருப்பை இழ தொண்டனே
மகிழ்ச்சியில் தலைவன்.


தலைக்கு மேல் கத்தி
திண்ணையில் அப்பா
நாளை மகனுக்காய்.

வேலை நிறுத்தங்கள்
புகையாத அடுப்புகள்
புரிதலில் முதலாளித்துவம்



இரவின் அமைதிக்காய்
கானலும் கடலும்
துணைக்கு மயானம்.

சமாதானிக்கும்
சாதிக் கலவரங்கள்
சமாதிக்குள் தலைவன்.

மனிதச் சங்கிலிகள்
மகிழ்ச்சியில் மனசு
பெண்கள் கல்லூரி சாலை.

சபலத்துக்கு தடை போட்டது
சமாதானத்து வெண்ணிறம்
வேதனையில் கைம்பெண்
.

வெள்ளப் பெருக்கிலும்
குப்பிகளில் குடி நீர்
சுகாதார சூட்சுமங்கள்.

மனதில் மருகளுடன்
மழலையர் பள்ளிமுன்
முதிர்கன்னிகள்.

அங்கீகாரம் ரத்தானது
தாய் எனும் உறவுக்கு
விதவையின் சூழ்.

புயல் பூகம்பத்தின்
பூர்வீக இருப்பிடம்
பெண்களின் மனது

பயந்து திரும்பியது
பாய்ந்து வந்த வல்லூறு
குஞ்சுகளை சுற்றும் கோழி

புதுப்பிக்கப்பட்டது
அடிமை சாசனம்
தேர்தல் முடிவுகள்



காலம் காலமாக
கருவரையில்
முடக்கப் பட்டது
தங்கம்

கடவுளின் துரோகமா?
மன்னர்களின் துரோகமா?
பார்ப்பன துரோகமா?

விடையில்லை
முடக்கப்பட்டது
முதிர்கன்னிகளின்
வாழ்வு




தங்கத்தின் பதுக்களால்


அறிவியலும்
பொறியியலும்
கணினியியலும்
கட்டாயப் படிப்பான
நாட்களில்

குழந்தாய்
நீயாவது உன்
வரவேற்பு மகிழ்வை

மழை நீரில்
நனைந்து
மழையோடு பறிமாறிக்கொள்

மூக்குப் பிடிக்க
திங்க மட்டுமே
தெறிந்த மனிதர்களுக்கு

அவர்களின்
முட்டாள்தனம்
புரியட்டுமே !

வியாழன், 7 ஜூலை, 2011

வெங்காயம் 07-07-2011















சீனிவாசப் பறையரின்
153 வது பிறந்த நாள்




சாதியின் பேரால் அவலம்




தனி வாழ்வின் கொடுமையில்
போராட்டம்




இரண்டுக்குமான
பாடம்
அவர்
********************இளஞாயிறு / 9443761307






மறைப்பது



அழிப்பது



கிழிப்பது



ஆகியவைதான்



இந்த ஆட்சியின்



பாடத்திட்டமாம்
***********************பொன்.குமார் / 9003344742






நீதிபதியின்
முதல்வருக்கான
தேநீர் விருந்து



தனியார் பள்ளி
கல்விக் கொள்ளையர்
குழு



சமச்சீர் கல்வியின்
சமாதி யார் கையில்?
*************************புதியபெரியவன்/9489361307






பழமையானது



இளமையானது



புதுமையானது



இனிமையானது



இன்னும் சொன்னால்



கோரமானது



காதல் - மரணம்
*****************************ச.மோகனராசு/9150175868

செவ்வாய், 5 ஜூலை, 2011



























கல்வியில்
முன்னேற்றம்
அறிவியலில்
முன்னேற்றம்
வாழ்வில்
முன்னேற்றம்
ஆனாலும்
மனிதன் - முன்னேறவில்லை
அதற்கான கல்வியும் இல்லை
தொடரும்
தீண்டாமைக் கொடுமை

*****************************9443761307

திங்கள், 4 ஜூலை, 2011

வெங்காயம் 04-07-2011




படித்துக் கிழித்தது
இறந்தகாலம்

கிழித்துப் படிப்பது
நிகழ் காலம்

போராடிப் படிக்க
வேண்டியது
எதிர்காலம்
***************************கு.நா.தங்கராசு/9843944044

பணம் தங்கம் கொண்ட
கட்டில்களின் மீது
படுத்து உறங்குது
ஒரு கூட்டம்
எல்லாம்
செத்த பின்பு
தெரிகிறது நாற்றம்
*****************************தஞ்சை கமருதீன்/9940781914

நாளை சம மருத்துவம்
சம வருமானம்
சம வாழ்க்கை கேட்பார்கள்
என்வே சமச்சீர் கல்வி
கொடுக்கக் கூடாது
துக்ளக் பார்ப்பானின்
தமிழர் துவேசம்
********************************இளஞாயிறு/9443761307


வரலாற்றை மாற்றத் துடிக்கும்
குறுக்கு நூலுக்கு
சூத்திரர்களீன் கல்வி பற்றி
என்ன அக்கறை
சமமாவது
சீராவது
வெங்காயமாவது
********************************அமீர்ஜகான்/9840954846

வெள்ளி, 1 ஜூலை, 2011

வெங்காயம் 01/07/2011

கடிவாளம் போட்ட குதிரையாய்
ஆங்கிலப்பள்ளி மாணவன்
பரந்துபட்ட பார்வையில்
அரசுபள்ளி மாணவன்
கவுரவம் பார்க்கும் பெற்றோர்கள்
காசு பார்க்கும்
கல்வி வியாபாரிகள்
***********************************புதியபெரியவன்/9489161307




தமிழக மீனவர்களைக்
காப்பாற்ற கையாலாகாத
இந்திய கடற்படை
ஒருமைப்பாடு
இறையான்மை
என்பது ஏமாற்றும்
பொய் வார்த்தைகளா?
இந்தியா இலங்கைக்கு
அடிமையா
*************************************
புதியபெரியவன்/9489161307