பக்கங்கள்

சனி, 20 ஆகஸ்ட், 2011

எந்தக் காலை வைத்தாலும்
ஏற்றிவிடும் ஏணி
எள்ளி நகையாடியது

வலது காலைவைத்து
வீட்டிற்குள்
வரச்சொல்லும்
மனிதனைப் பார்த்து

****************************இளஞ்சேட்சென்னி/9715829478








நீ எனக்கு தாலி
கட்டினால்

நான் உனக்கு
தாலி கட்டுவேன்

வரலாற்றில்
ஒரு முதல் பதிவு

ஆணுக்கு தாலி கட்டிய
முதல் தமிழ்ப் பெண்
தீந்தமிழ்

உடுமலை
ஆதி தீந்தமிழ்
திருமணம்
******************************* 9865906735



























நீர்
நிலம்
விவசாயம்
மனித உரிமை

அனைத்தையும்
நாசப்படுத்திவிட்டு

கொடியை
கம்பத்தில் ஏற்றுவதும்

சட்டைப் பையில்
குத்திக்கொள்வதும் தான்

தேசபக்தி என்றால்
நாடு அழிக





*************************************இளஞாயிறு/9443761307



"அறுக்க தெரியாதவன் கையில்
ஆயிரம் அறுவாள்"
சோனியா மன்மோகன்
கையில் ஆட்சி


ஒரு தாலிக்கு
மூன்று தூக்கு
ஒன்னரை லட்சம்
ஈழ உயிர்களுக்கு

**************************ஈழன்/9790777877

















"தீதும் நன்றும்
பிறர்தர வாரா"

சிந்தை
சிதைந்து
சிறுமையாக்கும்

சினிமா
சீரியல்
சியர்ஸ்
*************************தனபால்/9629193193









நினைவுபடுத்துகிறது
நீ அடிமை என்று
ஆகஸ்ட் 15
*****************************ஈழன்/9790777787

நடு இரவில்
வாங்கினோம்

இராகு முடிந்ததும்
பறந்தது

எங்கள் கோவணம்

*******************************புதியபெரியவன்/9489361307



சுப்பிரமணியசுவாமி மீது
அவர்கட்சி
வேலுச்சாமி
சொன்ன புகாரை

சி.பி.அய்
விசாரிக்காமல்

20 வருடத்திற்கும் மேலாக
சிறையில் உள்ள

பேரறிவாளன் சாந்தன் முருகனை
தூக்கிலிட துடிப்பது
ஏன்
சோனியா
காங்கிரஸே
**************************வெங்காயம்

















அட உங்கள்
டூத்பேஸ்ட்டில்
உப்பு இருக்கா

அறிவும் அறிவியலும்
முன்னேறியும்

பகுத்தறிவு
இல்லாமல்

பல் வலியில்
மக்கள்

"ஆலும் வேலும்
பல்லுக்கு உறுதி"
*****************************இளஞாயிறு/9443761307













ஆட்சியைக்
கையில்வைத்து
ஆடுகிறார்கள்
சோனியா மன்மோகன்

பி ஜே பி ஆர் எஸ் எஸ்
பின்னணியில்
நடத்துகிறார் நாடகம்
அன்னா அசாரே

எந்த பாதுகாப்பும்
இல்லாமல்
நாடும்
மக்களும்
****************************புதியபெரியவன்/9489361307

























சொந்தமாக செய்த
விவாசாயத்தை

விட்டு

கூலித்தொழிலுக்கு
மாறினான்

தொழில்
வளர்ச்சியென்று

பீற்றிக்கொண்டது
அரசாங்கம்
***************************ச.மோகனராசு/9150175868

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011






கந்து வட்டிக்காரனிடம்
கர்ப்பினி மனைவியை
அடகுவைத்து

காணாமல் போன
கணவனுக்காக

வைக்க வேண்டுமா
அருள் ஜோதியே

நெற்றியில் குங்குமம
***************************அருணாசலசிவா/8124177898



















நீ அங்கு
தூக்குக் கைதியாய்

நான் இங்கு
ஆயுள் கைதியாய்

நம் குழந்தை
சூழ்நிலைக் கைதியாய்

சிலர் விசாரிக்கப்படாமல்
யோக்கியனாய்

பார்ப்பனப்
பிறவிகள்
******************************இளஞாயிறு/9443761307


போராட்டமே வாழ்க்கை

உணவுக்கு மட்டுமே
போராடினால்
மிருகம்

உரிமைக்குமாக
போராடினால்
மட்டுமே
மனிதன்
***********************குணசேகர்/9361545000











அன்பு முத்தம்

மாணவர்களையும்
கல்வியையும்

அடுத்த வளர்ச்சிக்கு
அழைத்துச்செல்லும்

சான்றோர்களை மதித்து
தீர்ப்பளித்த

உச்ச நீதிமன்ற
நீதிபதிகளுக்கு







******************************இளஞாயிறு/9443761307










ஒருபுறம்
நீதிமன்றத்தில் நடக்கிறது
வழக்கு

மறுபுறம்
நடக்கிறது பேரம்

தாமதமாகும்
தீர்ப்பும் ஒரு குற்றமே
******************************புதியபெரியவன்/9489361307

சனி, 6 ஆகஸ்ட், 2011
















ஜூலை 27
ஆகஸ்ட் 2
ஆகஸ்ட் 5
ஆகஸ்ட் 10

சமச்சீர் புத்தகம்
வழங்க எல்லையாய்
நீதிமன்ற ஆணைகள்

ஆகஸ்ட் 9
மாறுமா
நீதிமன்ற நிலை

புரியாத
சட்டமும்
நீதியும்
அரசும்
**************************புதியபெரியவன்/9489361307











விதைத்தவன் பெயரை
சொல்லிக்கொண்டிருக்கும்
ஆலமர நிழல்கள்
பெருமையில்
எச்சமிட்ட பறவைகள்

*******************************இளஞாயிறு/9443761307

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011



செருப்பு
கல்வீச்சு

தமிழீழ
தாயகத் தெருக்களில்

புத்தன் வருகை

*****************************வாலிதாசன்/9894887705


ஊறப்போட்டு
பிழிந்த அரிசிமாவும்
வற்றலாகுமே

ஆறப்போட்ட
ஊழல் விசாரணைகள்
வெறும் பித்தலாட்டமே

********************************தனலட்சுமி/9965895540


விலைவாசியைக் குறைக்கும்
ஒரே மந்திரக்கோல்
விவசாயம்

ஒரு நாட்டின்
முதுகெலும்பு
விவசாயம்

சாய, தோல்
பாலிதீன் ஆலைகளால்
நாசமாகும்
விவசாயம்
*********************************கி.சுப்பிரமணி/9443761308


















உன் மௌனத்தைப்
புரிந்துகொள்ள
உதவியது

மலர் பாப்பாவின்
மழலைச்சொல்லை

புரிந்துகொள்ளும்
தாயின் கொஞ்சல்

*************************இளஞாயிறு/9443761307

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011












சிறகை விரிக்க
நினைக்கும் குஞ்சுகள்



இனிக்க நினைக்கும்
மலர்கள்



உழுதிடத் துடிக்கும்
கன்றுகள்



வானத்தை தொடத் துடிக்கும்
செடிகள்



இக்கரைக்கு அக்கரை
பச்சையாய்



எப்போதும்
மனிதர்கள் - இளமையில்.!.
**************************************இளஞாயிறு/9443761307









கதைதான்
என்றாலும்

ஒன்றிற்கு மூன்றாய்
மரங்களை
வெட்ட

கோடாறி கொடுத்தவள்
எப்படி தேவதையாக
இருக்க முடியும்?
****************************விநாயகமூர்த்தி/9715216794
























நதிகளில்
பொங்கிவரும்
புது வெள்ளம்

புன்னகை பூக்கும்
உழவனின் முகம்
மகிழ்வின் வெளிப்பாடாய்
ஆடி 18

"ஆடிப்பட்டம்
தேடி விதை"
என்பது இனி கனவோ?
*******************************புதியபெரியவன்/9489361307


திங்கள், 1 ஆகஸ்ட், 2011



குண்டும் குழியுமான
வகுப்பறைகள்

தடுமாறும்
சமச்சீர்க் கல்வி

பள்ளியிலும்
கல்வியிலும்
அரசியல்
*********************தனலட்சுமி/9965895540











பலமுறை
நீதிமன்றம் சென்று

ஒவ்வொருமுறையும்
சரியே என
தீர்ப்புப் பெற்ற

சம்ச்சீர் கல்வியை
ஆராயாது
முடக்கும் அரசு

முதலாளித்துவமா?
பார்ப்பனீயமா?
********************புதியபெரியவன்/9489361307

















மணல் அள்ளி
அழிக்கப்படும் நதி

நிரப்பப்படுகிறது
ஆலைக் கழிவுகளால்

வறண்டுகிடக்கும்
அதன் வழித்தடங்கள்

பசுமை மாறிய
தோட்டங்கள்
**********************இளசை / 9994595144