பக்கங்கள்

செவ்வாய், 28 ஜூன், 2011







தத்துவங்க்ளும்
கொள்கைகளும்
கோட்பாடுகளும்
புத்தகங்களாய்
பழைய காகிதக்கடையில்
"கழுத அறியுமா
கற்ப்பூர வாசனை?"

************************************இளஞாயிறு/9443761307
இலவசங்களை
மனிதனைத் தவிர
எந்த மிருகமும்
எதிர்பார்ப்பதில்லை




வேலைவாய்ப்பு
உறுதியில்லை
உயர்கல்வி முடித்ததும்
வங்கிக் கடனாளியாய்
இளம் மாணவன்
அய்ந்தாண்டு ஆட்சியில்
அனைத்து வகையிலும்
நாடு முன்னேற்றம்
ஆனாலும் தொடர்கிறது
ஏழைகளுக்கான
இலவசங்கள்
**********************************புதியபெரியவன்/9489361307


ஒரு தேர்தலில்
கெட்டவனுக்குப் போட்ட
வாக்கை
அடுத்த தேர்தலில்
மற்றொரு
கெட்டவனுக்கு போடும்
இயந்திரம்
தமிழன்
******************************வி.உதயகுமாரன்/9962861594




மங்கி வருகிறது
மக்களாட்சி
மக்களுக்கான
ஊழியர்களை
மன்னர்களாய்
நினைக்கும்
மக்களால்
*******************************மறைந்த கா.முருகன்/9750606161




தாலி விற்று
டாஸ்மாக்
செல்வோர்க்கெல்லாம்
தக்க சமயத்தில்
உதவுகிறது
"இலவசங்கள்"
********************************தனலட்சுமிபாஸ்கரன்/9765895540




கோவணம் இல்லா மக்களை
கல்லால் அடிப்பார்கள்
கொள்கை இல்லாதவர்களை
கோட்டையில் ஏற்றுவார்கள்
தமிழ்மக்கள்

இலவசங்கள் மூலம்
ஏழ்மையை
ஒழிக்கலாம் - என்பது
ஓட்டைச்சட்டியில்
நீரை சேமிப்பது
போன்றது
**********************படித்தது****அருண்/9865076550