பக்கங்கள்

சனி, 9 ஜூலை, 2011

கோவை கோகுலன் கவிதைகள்



இலவசங்களைத் தேடுது
இயலாதபோது மனம்
இரவு நேரக் கனவுகள்.

பாதை மாறுகிறது
பயணத்துவக்கம்
புகுந்த வீட்டில் பெண்.


எதுவும் நடக்கலாம்
இருப்பை இழ தொண்டனே
மகிழ்ச்சியில் தலைவன்.


தலைக்கு மேல் கத்தி
திண்ணையில் அப்பா
நாளை மகனுக்காய்.

வேலை நிறுத்தங்கள்
புகையாத அடுப்புகள்
புரிதலில் முதலாளித்துவம்



இரவின் அமைதிக்காய்
கானலும் கடலும்
துணைக்கு மயானம்.

சமாதானிக்கும்
சாதிக் கலவரங்கள்
சமாதிக்குள் தலைவன்.

மனிதச் சங்கிலிகள்
மகிழ்ச்சியில் மனசு
பெண்கள் கல்லூரி சாலை.

சபலத்துக்கு தடை போட்டது
சமாதானத்து வெண்ணிறம்
வேதனையில் கைம்பெண்
.

வெள்ளப் பெருக்கிலும்
குப்பிகளில் குடி நீர்
சுகாதார சூட்சுமங்கள்.

மனதில் மருகளுடன்
மழலையர் பள்ளிமுன்
முதிர்கன்னிகள்.

அங்கீகாரம் ரத்தானது
தாய் எனும் உறவுக்கு
விதவையின் சூழ்.

புயல் பூகம்பத்தின்
பூர்வீக இருப்பிடம்
பெண்களின் மனது

பயந்து திரும்பியது
பாய்ந்து வந்த வல்லூறு
குஞ்சுகளை சுற்றும் கோழி

புதுப்பிக்கப்பட்டது
அடிமை சாசனம்
தேர்தல் முடிவுகள்



காலம் காலமாக
கருவரையில்
முடக்கப் பட்டது
தங்கம்

கடவுளின் துரோகமா?
மன்னர்களின் துரோகமா?
பார்ப்பன துரோகமா?

விடையில்லை
முடக்கப்பட்டது
முதிர்கன்னிகளின்
வாழ்வு




தங்கத்தின் பதுக்களால்


அறிவியலும்
பொறியியலும்
கணினியியலும்
கட்டாயப் படிப்பான
நாட்களில்

குழந்தாய்
நீயாவது உன்
வரவேற்பு மகிழ்வை

மழை நீரில்
நனைந்து
மழையோடு பறிமாறிக்கொள்

மூக்குப் பிடிக்க
திங்க மட்டுமே
தெறிந்த மனிதர்களுக்கு

அவர்களின்
முட்டாள்தனம்
புரியட்டுமே !