பக்கங்கள்

சனி, 10 செப்டம்பர், 2011













பெண்ணுரிமை
வேண்டுமென்று
சொன்னால் போதுமா?
மனைவி கட்டிய
தாலியை
பெருமையுடன்
சுமந்து திறிவேன்
மண்ணில் வாழும்
நாள் வரை
*********************கணவன் ஆதி / 9842218014














இளமைக்
கனவுகள்
பட்டாம் பூச்சிகள்


காதல்
கனவுகள்
பட்டாம் பூச்சிகள்


மனதிலாடும்
வெற்றிகள்
பட்டாம் பூச்சிகள்
***************************9443761308 / 9150175868 / 9489361307











இயேசு
நபி
புத்தன்
மகாவீரர்
வள்ளளார்
மகரிசி
எல்லோருக்கும்
வயது சொன்னார்கள்
கிருஸ்ணன் வினாயகன்
வயது கேட்டால்
ஆன்மீகவாதிகளின் மனம்
புண்படும் என்கிறார்கள்
ஏன்?
******************************புதியபெரியவன்/9489361307
















ஏழைகளின்
பசிப்பினி போக்காமல்

தம் தொப்பையைக்
குறைக்க
விரதம் இருப்போருக்கு

எப்படி
இறங்கி வருவார்
அருள்ஜோதியே

எல்லாம்
அறிந்த
இறை ஜோதியே
************************************அருணாசலசிவா/8124177898













வரலாறு
இதிகாசம்
வேதம்

அத்தனையும்
அலசினேன்

கிடைக்கவில்லை விடை
இது எத்தனாவது

(பிறந்த நாள்) சதுர்த்தி
வினாயகருக்கு
***********************************ஞாயிறு / 9443761307



குண்டி காட்டி ஓடி
வெள்ளையனிடம்
வெகுமதி
வாங்கிய
சிறுமதிக் கூட்டம்
செங்கொடியின்
தியாகத்தின்
மீது சேறு வாரி
இறைக்கிறது
**************************************புதியபெரியவன்/9489361307










வெள்ளி, 2 செப்டம்பர், 2011



என்ன இரகசியம்
சொன்னது
காற்று

இப்படி
குலுங்கிக் குலுங்கி
சிரிக்கிறது

தன் நிழலில்
அமர்ந்து
தன்னையே வெட்டும்
மனிதனைப் பார்த்து
மரம்
************************தஞ்சை மல்லிகா/9698635499